இந்த விசயங்களை செய்வதன் மூலமும் உங்களுக்கு கெரோனா நோய் பரவலாம்

இன்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். உலகெங்கிலும் பரவியுள்ள இந்த வைரஸ் ஒருவருடமிருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் வழியாகவும், சில சமயங்களில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் அல்லது நீர்த்துளிகள் படிந்த இடம் அல்லது பொருளை ஒருவர் தொட்டு, கைகளை கழுவாமல் முகத்தில் வைக்கும் போதும் பரவுகிறது. இந்த கொடிய வைரஸ் குறித்த ஆய்வுகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் குறித்த சில புதிய தகவல்கள் கிடைத்தவாறு தான் உள்ளன.


இதற்காக பல நாடுகள் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவதோடு, ஊரடங்கைப் பிறப்பித்து, மக்களை வீட்டிலேயே இருக்க வைத்துள்ளது. அதோடு சுத்தமாக இருக்கவும் பரிந்துரைக்கிறது. ஆனால் நம்மிடம் உள்ள பல பழக்கங்கள் வைரஸ் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.


நகங்களைக் கடிப்பது
கைவிரல் நகங்களில் ஏராளமான கிருமிகள் இருக்கும். பலருக்கும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கிருமிகள் நிறைந்த நகங்களை எந்நேரமும், குறிப்பாக கொடிய கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் கடித்தால், பின் அந்த வைரஸ் உடலினுள் எளிதில் நுழைந்துவிடும். எனவே உங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்தால், இன்றே உடனே கைவிரல் நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


பருக்களை கிள்ளுவது
கொரோனா பரவும் காலத்தில் தேவையில்லாமல் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. அதிலும் முகத்தில் பருக்கள் இருக்கும் போது, முக அழகைக் கெடுக்கும் பருக்களை நீக்க பலரும் அந்த பருக்களை கிள்ளி பிய்த்தெறிய முயற்சிப்பார்கள். ஆனால் இப்படி செய்வது முகத்தில் பருக்களை அதிகம் வரவழைப்பதோடு, கொரோனா வைரஸ் தாக்கத்தையும் அதிகரித்துவிடும்.


தலைமுடியை தொடுவது
உங்களுக்கு நீளமான முடி இருந்தால், உங்கள் தலை மற்றும் முடியில் அழுக்குகள் அதிகம் தேங்கும். இந்நிலையில் கைவிரலால் முடியைத் தொடும் போது, தலையில் உள்ள அழுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் கைவிரலில் ஏறி, பின் எதிர்பாராத தீங்கை உண்டாக்கிவிடும். ஆகவே அடிக்கடி தலைமுடியைத் தொடாதீர்கள். அப்படியே தொட்டாலும், உடனே கைகளை நன்கு நீரில் கழுவிவிடுங்கள்.



படுக்கை விரிப்பை மாற்றாமல் இருப்பது
கொரோனா வைரஸ் துணிகளிலும் நீண்ட நேரம் உயிர் வாழக்கூடியது என்பதால், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் உடுத்தும் உடைகளை மாற்றிவிடுவதோடு, டவல் மற்றும் படுக்கை அறையில் உள்ள விரிப்பு மற்றும் தலையணை உறையை வாரத்திற்கு 2-3 முறை துவைத்து வெயிலில் உலர்த்துங்கள். 2 நாட்களுக்கு ஒரு முறை படுக்கை விரிப்பை மாற்றுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் நல்ல தூக்கமும் கிடைக்கும்.



உணவு ஊட்டுவது
அன்பாக உணவை ஊட்டிவிடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக மக்களிடையே பரவுவதால், இந்த காலத்தில் உண்ணும் உணவுப் பொருள் மற்றும் நீர் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இதனால் நீங்கள் மட்டுமின்றி உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும்.


கண்களைத் தொடுவது
நீங்கள் கண்களை அடிக்கடி தொடுபவராக இருந்தால், உடனே அந்த பழக்கத்தைக் கைவிடுங்கள். ஏனெனில் வைரஸானது கண்களின் வழியாக உடலுக்குள் நுழைந்து உடலை மோசமாக பாதிக்கலாம். எனவே மிகவும் கவனமாக இருங்கள்.


குறைவான தூக்கம்
ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும். எனவே லாக்டவுனில் உள்ளோம் என்று இரவு நீண்ட நேரம் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து, தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். முக்கியமாக தூங்குவதற்கு முன் மொபைல், லேப்டாப் போன்றவற்றை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்காமல், தொலைவில் வைத்துவிடுங்கள்.

Comments

Popular posts from this blog

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்