வைரஸ்கள் வாழும் திறக்கப்படாத அறை - வெளிவரும் மர்மங்கள்

கதவுகள் மற்றும் பூட்டுக்கள் என்பது நமக்கு பரிச்சப்படாத ஒரு விடயமலல்ல. அதன் தோற்றம் பற்றி நோக்குகையில், திறந்த வெளிகளில் தன்னை இயற்கையின் ஒரு பொருளாகக் கருதி வாழ்ந்த மனிதன் எப்போது தன் சுயத்தை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தானோ – ஒன்றைத் தனக்கானது என்று தனிப்படுத்தி நோக்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே இவை தோன்றியிருக்கக் கூடும் எனலாம்.

எது எவ்வாறிருப்பினும் கதவுகள் – பூட்டுக்கள் திறக்கப்படுவதற்கே அன்றி பூட்டியே வைப்பதற்கல்ல. என்றாலும் இன்றளவிலும் பல நூற்றாண்டுகளாகச் சில கட்டிடங்களின் கதவுகள் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளன. அதற்கான காரணங்கள் மர்மமாகவும் அமானுஷ்யம் நிறைந்ததாகவும் அமைந்துள்ள அதேசமயம், சில புதையல்களின் ரகசியம் காப்பதாகவும் கருதப்படுகின்றன.

அவ்வாறு உலகில் திறக்கப்படாத – திறக்க கூடாத கதவுகள் உள்ள பல இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. அவற்றில் ஒன்றைப்பற்றிய தகவைலைத்தான் இன்று நாங்கள் பார்க்கப்போகிறோம்.  வாங்க வீடியோக்குள்ள போகலாம்.

#பெரியம்மை வைரஸ் தக்கவைப்புக் கதவுகள் (Small pox chamber)

இந்தக் கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கின்றதென்பது உலக மக்கள் பலரும் அறிந்ததே. என்றாலும் இக்கதவானது எவராலும் திறக்கப்படாத எக்காலத்தும் திறக்கக் கூடாதென்று வேண்டப்படுகின்ற ஒரு கதவாகக் கருதப்படுகின்றது. அப்படி என்னதான் இருக்கின்றது இந்தக் கதவுகளுக்குப் பின்னால் என்றால், பெரியம்மை வைரஸ்.

1986ஆம் ஆண்டில் WHO (உலக சுகாதார அமைப்பு), பெரியம்மை நோய்க்கான அனைத்து வைரஸையும் அழிக்க பரிந்துரைத்து, அழிக்கும் தேதியை 30.12.1993 ஆக நிர்ணயித்தது. பின்னர் 30.06.1999 க்கு இது ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 30.06.2002 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்கா மற்றும் ரஷ்யா குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக வைரஸினை முற்றாக அழிக்காமல் அதன் பங்குகளை தற்காலிகமாக வைத்திருக்கும் அனுமதியைப் பெற்றுக் கொண்டது.

இருப்பினும் WHO ஆல் நியமிக்கப்பட்ட பொது சுகாதார நிபுணர்களின் குழு நடத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா தொடர்ந்து வைரஸ் பங்குகளைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் எந்தவொரு அத்தியாவசிய பொது சுகாதார நோக்கமும் நிறைவேற்றப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இன்றளவில் இந்த நோய் யாருக்கும் இல்லை என்றாலும் இந்நோயை உருவாக்கும் வைரஸின் கடைசி இரண்டு எச்சங்கள் மட்டும் இன்றளவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் உள்ள அரசாங்க ஆய்வகங்களில் வாழ்கின்றன. அவை பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறைகளே ‘ஸ்மோல் பாக்ஸ் ச்சாம்பர்’ என்று அழைக்கப்படுகின்றன.

உலகில் இருந்து அழிக்கப்பட்ட ஒரு நோயை முற்றாக அழிப்பதை விட்டுவிட்டு அந்நோயைப் பரப்பக்கூடிய வைரஸை எந்த ஒரு பொது அல்லது சரியான காரணமின்றி ஏன் இந்த நாடுகள் பாதுகாத்து வைத்துள்ளது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடியதே.

காரணம் இன்றி காரியங்கள் இல்லை என்பதற்கமைய இதற்கும் ஒரு காரணம் உண்டு. வரும்காலத்தில் என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டி நேரிட்டால், நேருக்கு நேர் மோதியோ, ஆயுதம் சுமந்த போர் செய்வதற்கோ பதிலாக எதிரி நாட்டினுள் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நோய்க்கிருமியைப் பரப்பிவிட்டு அந்நாட்டினை அழிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளே அதிகம்.

ஆகவே Bio war என்று சொல்லப்படுகின்ற குறிப்பிட்ட வகைப்போரிற்கு உயிர் ஆயுதமாகப் பயன்படுத்தவே இந்த பெரியம்மை வைரஸ் தக்கவைப்பு நிகழ்ந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. எனவே எதிர்கால போர்கள் குறித்த கதவுகளின் பூட்டுக்களைத் திறக்கலாம். என்றாலும் திறக்கப்படக் கூடாதென்பதே பலரின் வேண்டுதல். இது திறக்கப்பட்டால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவது சர்வ நிச்சயம்.

தற்போதைய கொரோனா வைரசு கூட சீனாவின் ஒரு ஆய்வு கூடத்தில் இருந்துதான் பரவியது என்ற தகவலை பார்க்கும் போது இப்படியான ஒரு கொடிய வைரஸ் உள்ள அறையின் கதவுகள் திறக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை நினைக்க கொஞ்சம் பயங்கரமாகத்தான்  இருக்கிறது. இந்த பதிவு பற்றிய உங்க கருத்துக்களை மறக்காமல் காமண்ட் பண்ணுங்க...

Comments

Popular posts from this blog

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்